• Kaduvetti Guru குடும்பத்திடம் டீல் பேசிய Sowmiya Anbumani, கொதிக்கும் Ramadoss! | Elangovan Explains
    Jun 26 2025

    'கலைஞரிடம், ஸ்டாலின் இருந்தது போல இருக்க வேண்டும். என் மூச்சிருக்கும் வரை, நான்தான் பாமக தலைவர்' என அதிரடி காட்டியுள்ளார் ராமதாஸ். இந்தளவுக்கு கோபப்படுவதற்கு பின்னணியில் 3 காரணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். முக்கியமானது, 'ராமதாஸ்க்கு எதிராக காடுவெட்டி குரு குடும்பம் உள்ளிட்ட பலரிடம் டீல் பேசி வந்துள்ளார் சௌமியா அன்புமணி' என்கிறார்கள்.

    அடுத்து என்ன நடக்கப் போகிறது பாமக-வில்?

    இன்னொருபக்கம், பாஜக-வின் 21 மாநில பதவிகளுக்கான லிஸ்டை தயாரித்து, அமித் ஷா டேபிளுக்கும் அனுப்பியுள்ளார் நயினார் நாகேந்திரன். பெரிய ரேஸே ஓடுகிறமு பாஜக-வில்.

    Show More Show Less
    18 mins
  • உடையும் 'DMK-MDMK' கூட்டணி? Duraimurugan-ஐ கட்டம் கட்டும் அறிவாலயம்? | Elangovan Explains
    Jun 25 2025

    துரைமுருகனின் பொது செயலாளர் பதவியை பறித்துவிட்டு வேறொரு சீனியருக்கு கொடுக்கும் திட்டம் என டாக். இதற்கு அச்சாரமாக, மேலிட மாப்பிள்ளை கேட்ட கேள்வியால், துரைமுருகன் அப்செட் என தகவல்.

    இதனால் இன்னொரு பக்கம் எடப்பாடி ஹேப்பி. அவர் போடும் லாபக் கணக்கு.

    இன்னொரு பக்கம், 'திமுக - மதிமுக கூட்டணி' உடைகிறதா? காரணம் , சாரைசாரையாக திமுகவில் இணைந்த மதிமுகவினர். மு.க ஸ்டாலின் கொடுத்த கிரீன் சிக்னலால், தட்டித் தூக்கிய செந்தில் பாலாஜி என்கின்றனர். முக்கிய பின்னணியாக, மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஸ்டாலினை சீண்டிய சமாச்சாரங்கள் உள்ளன என்கிறார்கள்.

    Show More Show Less
    17 mins
  • ‘பழசை ஞாபகப்படுத்துங்க' BJP-க்கு அதிர்ச்சி தரும் EPS! கூட்டணி குஸ்தி! | Elangovan Explains
    Jun 24 2025

    நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது ஆர்.எஸ்.எஸ். இந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இங்கே பிஜேபி-யை வெற்றி பெற வைக்க, மண்டல வாரியாக, ஆன்மீக மாநாடு என ஆறு முக்கியமான வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் பாஜக கூட்டணியால் இரண்டு முக்கிய நெருக்கடியை சந்திக்கிறது அதிமுக.

    இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்காகவும் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ஆர்பி உதயகுமார் சில நகர்வை முன்னெடுத்துள்ளார்.

    புது புது அசைன்மென்ட்களும் கொடுத்துள்ளார் எடப்பாடி.

    Show More Show Less
    17 mins
  • 'முருகன் மாநாடு' BJP-க்கு எதிராக Stalin கையிலெடுக்கும் 'ஐயனார் அரசியல்!' | Elangovan Explains
    Jun 24 2025

    மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

    இது முழுமையாக இந்துக்கள் வாக்குகளை அறுவடை செய்து விடும் என நம்பிக்கையோடு லாபக் கணக்கு போடுகிறது பாஜக. அதே நேரத்தில் இந்த மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்த காணொளி . அந்த நேரத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்த அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார்,கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி , செல்லூர் ராஜு உள்ளிட்டோர். திராவிடத்திலிருந்து நழுவுகிறதா அதிமுக? என கடும் நெருக்கடியை சந்திக்கும் எடப்பாடி. அதே நேரத்தில் பாஜக Vs திமுக என களம் உருவாவதில் அமித் ஷா மகிழ்ச்சி. இவை எல்லாவற்றையும் முறியடிக்க மூன்று ஆன்மீக அஜெண்டா-க்களை கையில் எடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். அது, பாஜக முன்வைக்கும் பிளவுவாத ஆன்மீக அரசியலை அடித்து விரட்டும் என்கிறார்கள் அறிவாலயத்தினர்.

    Show More Show Less
    24 mins
  • Amit shah டீமின் 80 தொகுதிகள் லிஸ்ட், EPS-க்கு நெருக்கடி? | Elangovan Explains
    Jun 21 2025

    ஒரு பக்கம் முருகன் மாநாட்டில் தீவிரமாக இருந்தாலும் தங்களுக்கு ஏதுவான தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர் பாஜகவினர். அந்த வகையில் 80 தொகுதிகளை கையில் எடுத்து, அதில் 50 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு வரை சென்று, பட்டியலை தயார் செய்துள்ளனர்.

    இது தற்போது அமித் ஷா பார்வைக்கும் சென்றுள்ளது.

    முருகன் மாநாட்டில் கிடைக்கும் வெற்றி, பாஜக மீது திரும்பும் பொதுமக்கள் பார்வை இவையெல்லாம் திமுகவுக்கு அச்சுறுத்தலையும், இன்னொரு பக்கம் எடப்பாடி-யிடம் அதிக தொகுதிகளையும் பெற்று தரும் என டெல்லி கணக்கிடுகிறது. அந்த வகையில் முருகன் மாநாட்டின் பிரமாண்டம், இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை கொடுக்கக்கூடிய நெருக்கடிக்கும் எடப்பாடியை தள்ளியுள்ளது. பாசிட்டிவ்-வில் ஒரு நெகட்டிவ். இன்னொரு பக்கம், 'பாஜகவை நம்பி ஏமாந்து விட்டோம்' என புலம்பும் பன்னீர் டீம். உள்ளனர் பன்னீர் அவர்கள் எழுப்பியுள்ள போர்க்கொடியால், ஜூலை முதல் வாரத்தில் முக்கிய முடிவெடுக்க மீட்டிங் அரேன்ஜ் செய்துள்ளார் ஓபிஎஸ்

    Show More Show Less
    19 mins
  • S P Velumani வழக்கை வைத்து விளையாடும் Senthil Balaji & Ramadoss - Thiruma Alliance?
    Jun 20 2025

    மாஜி அமைச்சர்களின் Files-களை தூசு தட்டும் மு.க ஸ்டாலின்.

    முதற்கட்டமாக எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.காமராஜ், எஸ்.பி வேலுமணி வழக்குகளை தூசுதட்டுகின்றனர். அதில் முதல் ஹிட்லிஸ்டில் எஸ்.பி வேலுமணி உள்ளார். அவரை எதிர்த்து புதிய ஒரு ஆட்டத்தையும் ஆடத் தொடங்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி. ஏனெனில் எஸ்.பி வேலுமணி, அண்ணாமலை, விஜய் என கோவை களம் டஃப்பாக உள்ளது.

    இதை முறியடித்து வெற்றி பெற புதிய வியூகங்கள் வகுத்துள்ளார் பாலாஜி. இன்னொரு பக்கம், ராமதாஸ் Vs அன்புமணி வார். இதில் அன்புமணியின் கூட்டுப் பிரார்த்தனை-யொட்டி, சேலம் மேற்கு பா.ம.க எம்.எல்.ஏ அருள் வீசிய அரசியல் வெடி. இதற்கிடையில் திருமாவிடம் கூடுதல் பாசத்தை வெளிப்படுத்தும் ராமதாஸ். இதன் மூலமாக மீண்டும் 'ராமதாஸ் - திருமாவளவன்' கூட்டணி உருவாகிறது என பாஜக அதிர்ச்சி.

    Show More Show Less
    22 mins
  • டேபிள் நிறைய டேட்டாக்கள், மந்திரிகளால் ஷாக்கான Stalin! | Elangovan Explains
    Jun 19 2025

    தொகுதி வாரியாக 'ஒன் & ஒன்' மீட்டிங் நடத்தி வருகிறார் மு.க ஸ்டாலின். ஒவ்வொரு ஒ.செ-வுக்கும் கிட்டத்தட்ட ஆறு நிமிடம் வரை நேரம் கொடுக்கிறார். அதில் மாவட்ட செயலாளர், மந்திரிகள் குறித்தும் கட்சி செயல்பாடுகள் குறித்தும் கேட்கிறார். இதில் விழுப்புரம், சிதம்பரம், உசிலம்பட்டி டேட்டாக்கள் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதையொட்டி அங்கே இருக்கும் கோஷ்டி பூசல்கள் முக்கியமாக பொன்முடி வ்ச் லட்சுமணன் பிரச்சனை. இதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்கிறார். அடுத்து வீக் தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது, இதில் உதயநிதி ஸ்டாலினின் ரோல் என்ன? என பல ஆலோசனைகள் கொடுத்துள்ளார். சில தொகுதிகளில் ஒ.செ-க்கள், மந்திரிகளை போட்டுக் கொடுத்துள்ளனர். குறிப்பெடுத்துக் கொண்ட ஸ்டாலின், மந்திரிகள் ரிப்போர்ட்டில் இது எல்லாம் மைனஸ் மார்க்காக பதிவு செய்கிறார். இதனால் கலக்கத்தில் உள்ளனர் மந்திரிகள். குறிப்பாக 'மதுரை' சம்பவம்.


    இதையே தான் கையில் எடுத்து களமாட தொடங்குகிறது பாஜக. முருகன் மாநாட்டை வைத்து ஸ்டாலினுக்கு நெருக்கடி இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை பெறுவது என இரட்டை அஜெண்டா. இதனால் ஒரு வகையில் தர்ம சங்கடத்தில் எடப்பாடி. இன்னொரு முக்கியமான காரணம், அமித்ஷா கையில் எடுத்திருக்கும் ஊழல் பட்டியல்.

    அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து அண்ணாமலை கொடுக்கும் குடைச்சல்கள். செம்மலை மூலமாக இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி.

    இதற்கிடையே அப்பா - மகன் யுத்தத்தில் Thug life கொடுத்துள்ளார் ராமதாஸ். சேலம் சென்றும் கோபம் குறையாமல் அன்புமணி.

    Show More Show Less
    23 mins
  • மிட்நைட் விசாரணை, மாட்டிவிட்ட மகேஸ்வரி, திகிலில் பூவை ஜெகன்மூர்த்தி - ஜெயராம்! | Elangovan Explains
    Jun 18 2025

    சிறுவன் கடத்தல் விவகாரம், இதில் ஏடிஜிபி ஜெயராம் எப்படி சம்மந்தப்பட்டார், யாரந்த மகேஸ்வரி, காதல் திருமணம் செய்த பெண்ணின் அப்பா வனராஜா பின்னணி. முக்கியமாக மகேஸ்வரி மூலமாக ஜெயராம் தொடர்பு எடுத்து அவர் மூலமாக பூவை ஜெகன் மூர்த்தியிடம் பேசி உள்ளனர். அவரும் தனுஷ் அம்மா லட்சுமிமியிடம் தனியார் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்திய உள்ளார். இது அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்றெல்லாம் தகவல் . இதில் மூர்த்தி எப்படி சம்மந்தம், கோர்ட்டில் மற்றும் விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள், பூவை-க்கு ஆதரவான வழக்கறிஞர் புளியந்தோப்பு மோகன் கருத்துகள் , இன்றைய உச்சநீதிமன்ற கண்டனம் வரை உள்ள பின்னணிகள் என தோண்ட தோண்ட திடுக் தகவல்கள்.

    Show More Show Less
    23 mins